Pages

Saturday, 5 March 2016

சணப்பில் கம்பளிப்புழுவா!

சணப்பில் கம்பளிப்புழுவா!

சணப்பு பயிரை தாக்கக்கூடிய முக்கியமான பூச்சி கம்பளிப்புழு. இதன் புழுக்கள் இலைகளை கடித்து அதிகளவில் சேதம் விளைவிப்பதோடு காய்களை துளைத்து, விதைகளை உண்டும் சேதப்படுத்துகின்றன. பெண் அந்துப்பூச்சி சிறிய, வெண்ணிற முட்டைகளை தளிர்இலை மற்றும் செடிகளின் குருத்துப் பகுதியில் இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம்புழுக்கள், இலைகளை கடித்து உண்ணும். செடிகளின் இளம் வளர்ச்சி பருவத்தில் புழுக்கள் இலைகளை உண்ணும்.

வளர்ந்த செடிகளில் காய்களை துளைத்து விதைகளை உண்ணும். வளர்ந்த புழுக்கள் பழுப்புநிறத் தலையுடன் தென்படும். புழுக்களின் உடலின் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் மஞ்சள்நிற கோடுகளும், பக்கவாட்டில் கருமை, ஆரஞ்சு நிற பட்டைகளும் காணப்படும். பழுப்புநிற நீண்ட ரோமங்களும் காணப்படும்.

அந்துபூச்சிகள் பகல்வேளையில் பறந்து திரியும். கை வலை கொண்டும் விளக்குப்பொறி வைத்தும் கவர்ந்து அழிக்கலாம். புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம்.

அதிகம் தாக்கப்பட்ட செடிகளை வெட்டி அழிக்கவேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்கலாம். டிரைகோடெர்மா மற்றும்
டெலினாமஸ் இனங்கள் முட்டைகளை தாக்கி அழிக்கக்கூடியது. புழுக்களின் திசுக்களை துளைத்துச் செல்லும் மருந்துகளை, தக்கஅளவு பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய் தாக்காத விதைகளை பயன் படுத்துவதும் அவசியம்.
-முனைவர் ரா. கோபாலகிருஷ்ணன்,
பூச்சியியல் துறை, வேளாண் தொழில்நுட்ப கல்லூரி,
குள்ளப்புரம், தேனி

No comments:

Post a Comment