Pages

Friday, 2 October 2015

வனபத்ரகாளிஅம்மன் திருகோவில் - கோவை மாவட்டம், மேட்டுபாளையம்



வனபத்ரகாளிஅம்மன் திருகோவில் மிகவும் சிறப்பும் பழமையும் வாய்ந்த இந்த திருகோவில் கோவை மாவட்டம் மேட்டுபாளையம் வட்டம் தேக்கம்பட்டி அருகில் பவானி ஆற்று படுகையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இங்கு அம்மன், பக்காசூரன், பீமண் மற்றும் விநாயகர் கோவில்கள் அமைந்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு இருந்த அசுர தியசக்தியை அளிப்பதற்காக வந்து இந்த காட்டில் அம்மன் தங்கியதால் வனபத்ரகாளி என்று பெயர் வந்தது என்று சொல்லப்படுகிறது. இந்த கோவில் ஆரவல்லி-சூரவல்லி பில்லி சூனியங்களும் தெய்வங்கள் கதை தொடர்புடையது என்றும் பீமன், பாண்டவ சகோதரர்களும் இங்கு இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அடி மாதம், அம்மாவாசை மற்றும் சிறப்பு தினங்களிலும் அம்மனின் அருள் கிடைக்க பல வெளி ஊர்களில் இருந்தும் வருகிறார்கள். மேட்டுபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு பஸ் வசதி உள்ளது.

No comments:

Post a Comment