Pages

Saturday, 5 March 2016

மாடித் தோட்டம் (Maadi Thottam News)










மாடி தோட்டத்தில் முக்கிய பிரச்சினை, மண் இறுகி போவது. நாம் என்ன தான் மணலையும், செம்மண்ணையும் கலந்து, தேவையான அளவு உரம், இலை மக்கு எல்லாம் போட்டு கலந்து எடுத்தாலும், நீர் ஊற்ற ஊற்ற மெதுவாக மண் இறுகி போகிறது. ரோஸ் மாதிரி செடிகள் தாக்கு பிடித்து விடுகின்றன. ஆனால் கீரை, காய்கறி செடிகள் திணற ஆரம்பிக்கிறது. மேலும், காற்றின் வேகமும் மேலே அதிகமாக இருப்பதால் இலைகள் வேகமாய் வறட்சி ஆகி வளர்ச்சி சரியாய் இருப்பதில்லை. 

மாடி தோட்டத்தில் மிக முக்கியமாய் மணலை விட்டுவிட்டு தேங்காய் நார் தூள் பயன்படுத்த வேண்டும்( Coir Pith / Coco Peat). தேங்காய் நாரில் இருந்து கயிறு திரிக்கும் தொழில்சாலைகளில், தேங்காய் நாரில் இருந்து பவுடர் போல உதிர்ந்து விழும் Saw Dust போன்ற பொருள் தான் இந்த Coir Pith. நாம் ஒரு தேங்காய் மட்டையை எடுத்து லேசாய் உதிர்த்து பார்த்தாலே தூசி போல கொட்டும். இந்த பவுடர் இப்போது நிறைய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. அங்கே இதை மண்ணிற்கு பதிலாக பயிர் வளர்க்க பயன்படுத்துகிறார்கள். இங்கே பொள்ளாச்சி பக்கத்தில் நிறைய தொழில்சாலைகள் இருக்கின்றன. இந்த பவுடரை Compress செய்து ஒரு கிலோ, ஐந்து கிலோ கேக் வடிவில் கிடைக்கிறது.

Coir Pith block ஐ உடைத்து நீரில் ஒரு இரண்டு நிமிடம் ஊற வைத்தால் உதிர்ந்து விடுகிறது. தேங்காய் நார் தயாரிக்க பொதுவாய் Saline Water ல் ஊற வைக்க படுகிறது. இதனால் இந்த பவுடரில் கொஞ்சம் உப்பு தன்மையும், அதிகமாக Electrical Conductivity யும் இருக்கும். அப்படி இருந்தால் அது செடி வளர ஆகாது. இதை EC Value கொண்டு ‘Low EC block’ ‘High EC block’ என்று குறிப்பிடுகிறார்கள்.  மேலும் இந்த பவுடரை Compress செய்யவும் கொஞ்சம் bonding material பயன்படுவார்கள். இதை எல்லாம் நீக்க நாம் நீரில் ஊறவைத்து கொஞ்சம் கழுவி/அலசி எடுத்து கொள்வது நல்லது. அப்போது தான் செடி நன்றாக வரும்.
       
இந்த பவுடர் வெறும் ஊடகம் அவ்வளவு தான். அதில் செடிக்கு தேவையான எந்த கனிமங்களோ, சத்துகளோ கிடையாது. நீரை பிடித்து கொள்ளவும், செடியின் வேர் எளிதாய் போகவும் ஒரு நல்ல மீடியா. அவ்வளவு தான். அதனால் இந்த பவுடருடன், எதாவது Organic Compost மற்றும் கொஞ்சம் செம்மண் கலந்து நாம் தயார் செய்ய வேண்டும். எந்த விகிதத்தில் என்பது ஒவ்வொருவரும் வேறு வேறு விகிதம் சொல்கிறார்கள். நான் இரண்டு விதமான கலவைகள் எடுத்து முயற்சிக்கிறேன். ஓன்று, Coir Pith : Red Sand  : Vermi Compost 2:2:1 விகிதத்தில், இன்னொறு கலவை  Coir Pith : Red Sand: Vermi Compost : 2:1;2  விகிதத்தில். இரண்டிலும் வரும் செடியில் ஏதும் வித்தியாசம் வந்தால் பார்க்கலாம்.  தோட்டத்தில் இங்கே எதுவுமே இப்படி தான் என்று கிடையாது. எல்லாம் நம் முயற்சி தான். செடி ஒழுங்காய் வந்தால் அது வெற்றி தான்.

இப்போது கலவை தயார். அடுத்தது செடி வைக்கும் தொட்டி.. மாடி தோட்டத்திற்கு என்று நிறைய வகைகளில் Grow Bags கிடைக்கிறது. நம்மிடம் இருக்கும் பழைய பிளாஸ்டிக் பக்கெட், பெயின்ட் டப்பா இருந்தாலும் பயன்படுத்தலாம். Grow Bags பயன்படுத்தும் போது முதலில் சில தேங்காய் மட்டைகளை ஒரு அடுக்கில் போட்டுவிட்டு பிறகு coir pith கலவையை கொட்டவும். இது நல்ல ஒரு அஸ்திவாரமாய் இருக்கும். கலவையை மேலே வரை கொட்டி விட்டு விதை போட வேண்டியது தான். கீரை விதை என்றால் மேல் அடுக்கில் லேசாய் தூவி, அதன் மேல் இன்னும் ஒரு அடுக்கு கலவையை தூவி விட்டால் போதும்.

முதல் கட்டமாய் கீரை வகைகள் சிலவும் (பாலக்கீரை, பருப்பு கீரை, புளிச்ச கீரை, சிறு கீரை, கொத்தமல்லி), முள்ளங்கி, கேரட் என்று சில கிழங்கு வகையும் போட்டிருக்கிறேன். கீரை வழக்கமாய் தரையில் வருவதை விட செழிப்பாக வளர்ந்திருக்கிறது.
     
மாடி தோட்டம் பொதுவாய் Shade Net வைத்து ஒரு பசுமை குடில் போல (Green House) அமைத்து உருவாக்குகிறார்கள். முதல் மாடியில் தோட்டம் அமைக்க இது போன்ற அமைப்பு தேவை இல்லை என்று சொல்கிறார்கள். ரொம்ப உயரம் (இரண்டாவது மாடியும் அதற்கு மேலும்) போகும் போது வெயிலின் தாக்கமும், காற்றின் வேகமும் அதிகமாய் இருக்கும் போது கட்டாயம் இந்த பசுமை குடில் அமைப்பது தேவை. இங்கே சுற்றி வெறும் காலி இடம் என்பதால் காற்றின் வேகத்தை கட்டுப்படுத்த முதல் மாடியிலேயே எனக்கு இந்த அமைப்பு தேவை படும். இப்போது இந்த தோட்டம் மாடிக்கும் கொஞ்சம் கீழே உள்ள இடத்தில் அமைத்திருக்கிறேன். சின்னதாய் ஒரு பசுமை குடில் அமைத்து சில முயற்சிகளை அடுத்து துவங்க வேண்டும்.

எல்லோருக்கும் வரும் இன்னொரு சந்தேகம், மாடி தோட்டம் என்றால் தண்ணீர் நம் வீட்டின் கான்ரீட் கூரையில் இறங்கி சேதம் ஆகிவிடுமோ என்று. நீர் தேங்கி இல்லாத வரை எந்த பிரச்னையும் இல்லை என்று தான் சொல்கிறார்கள். நான் பார்த்த சில பெரிய மாடி தோட்டங்களில் இதற்கான எந்த அமைப்பும் செய்யவில்லை. லேசாய் தண்ணீர் தெரிப்பதால் ஒன்றும் பாதகமில்லை. வேண்டும் என்றால் Plastic Paint மாதிரியோ, இல்லை என்றால் பெரிய பாலிதீன் விரிப்பு ஒன்றோ அமைத்துக் கொள்ளலாம்.

சணப்பில் கம்பளிப்புழுவா!

சணப்பில் கம்பளிப்புழுவா!

சணப்பு பயிரை தாக்கக்கூடிய முக்கியமான பூச்சி கம்பளிப்புழு. இதன் புழுக்கள் இலைகளை கடித்து அதிகளவில் சேதம் விளைவிப்பதோடு காய்களை துளைத்து, விதைகளை உண்டும் சேதப்படுத்துகின்றன. பெண் அந்துப்பூச்சி சிறிய, வெண்ணிற முட்டைகளை தளிர்இலை மற்றும் செடிகளின் குருத்துப் பகுதியில் இடும். முட்டைகளில் இருந்து வெளிவரும் இளம்புழுக்கள், இலைகளை கடித்து உண்ணும். செடிகளின் இளம் வளர்ச்சி பருவத்தில் புழுக்கள் இலைகளை உண்ணும்.

வளர்ந்த செடிகளில் காய்களை துளைத்து விதைகளை உண்ணும். வளர்ந்த புழுக்கள் பழுப்புநிறத் தலையுடன் தென்படும். புழுக்களின் உடலின் மேற்புறத்திலும் பக்கவாட்டிலும் மஞ்சள்நிற கோடுகளும், பக்கவாட்டில் கருமை, ஆரஞ்சு நிற பட்டைகளும் காணப்படும். பழுப்புநிற நீண்ட ரோமங்களும் காணப்படும்.

அந்துபூச்சிகள் பகல்வேளையில் பறந்து திரியும். கை வலை கொண்டும் விளக்குப்பொறி வைத்தும் கவர்ந்து அழிக்கலாம். புழுக்களை கையால் சேகரித்து அழிக்கலாம்.

அதிகம் தாக்கப்பட்ட செடிகளை வெட்டி அழிக்கவேண்டும். 5 சதவீத வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்கலாம். டிரைகோடெர்மா மற்றும்
டெலினாமஸ் இனங்கள் முட்டைகளை தாக்கி அழிக்கக்கூடியது. புழுக்களின் திசுக்களை துளைத்துச் செல்லும் மருந்துகளை, தக்கஅளவு பயன்படுத்தி தெளிக்க வேண்டும்.

பூச்சி, நோய் தாக்காத விதைகளை பயன் படுத்துவதும் அவசியம்.
-முனைவர் ரா. கோபாலகிருஷ்ணன்,
பூச்சியியல் துறை, வேளாண் தொழில்நுட்ப கல்லூரி,
குள்ளப்புரம், தேனி

காரமடை - ரங்கநாதர் திருக்கோவில்

Image of the temple tower of Ranganathaswamy temple

காரமடை ரங்கநாதர் திருக்கோவில் -  தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருகில் காரமடை என்னும் இடத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து கரமடைக்கு இரயில் வசதியும் உள்ளது. பயண  நேரம் 30 நிமிடம்.

மாசி மாதம் (பிப்ரவரி-மார்ச்), ராமானுஜர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ள பிரம்மோத்சவம் விமரிசையாகக் கோயில் திருவிழாக்கள் ஆகும்.இக் கோவிலில் சிலைகள் வித்தியாசமாக ஒரு சதுர கல்லில் சிற்பமாக உள்ளது. வேணுகோபாலர் தேவியருடன் ருக்மிணி சத்தியபாமா சேர்த்து நம்மாழ்வார் கொண்டு, ராமானுஜர், மணவாள, அனைத்து வைணவ ஆச்சாரிகளின் அருள்பாலிக்கிறார். சந்தான கிருஷ்ணன், பரய் வாசுதேவ மற்றும் நகர் சன்னதிகள் உள்ளன. வேணுகோபாலர், ராமர் மற்றும் கோபியர்கள் சிலைகள் அமைந்துள்ளது.

பல ஆயிரம் பக்தர்கள் தினம் ரங்கநாதரின் அருள் பெற்று செல்கின்றனர். இங்கு ஆண்டு தோறும் பிப்ரவரியில் தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெறும். 



Friday, 4 March 2016

தென் திருப்பதி (Then Thirumalai, Sirumugai)


தென் திருப்பதி - மேட்டுபாளையம் வட்டம், கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிறுமுகை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். திருப்பதி எல்லோருக்கும் தெரியும் ஆனால் இந்த சின்ன தென் திருப்பதி பலருக்கும் அறிய வாய்ப்பு இல்லை. கே.ஜி நிறுவனத்தின் சொந்த பராமரிப்பில் இந்த ஆலயம் நடத்தப்படுகிறது ஆலயமும் நிறுவனத்தின் உள்பகுதியில் அமைந்துள்ளது. திருப்பதி போலவே இங்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு தரப்படுகிறது இதன் சுவையும் தனிதான். இங்கு வந்து அருள் பெற்று பயன்பெறவும்.
சிறுமுகை அருகில் அமைந்துள்ளது இந்த ஆலயத்திற்கு தினமும் பல ஆயிரம் பக்தர்கள் வந்து அருள் பெற்று செல்கிறார்கள். நீங்களும் பகவான் பெருமாளின் அருள் பெற வாருங்கள்.

நீங்களும் ஆன்லைன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும்


ஆன்லைன் மூலம் நல்ல வருமானம் பெறமுடியும் இதற்க்கு தேவையானவைகள் முதலில்: நமது சிறு உழைப்பு மற்றும் தகவல் திரட்டும் திறன் இருந்தால் போதும். இரண்டாவது: கம்ப்யூட்டர் அதாவது கணினி மற்றும் இன்டர்நெட் வசதி வேண்டும் இது இருந்தால் நீங்களும் மாதம் மாதம் வேலைக்கு சென்று பெரும் வருமானத்தை விட அரு பங்கு வீட்டில் இருந்த படியே வருமானம் பெறலாம். மேலும் பல தகவல்கள் இந்த வலை பூ மூலம் தரப்பட்டுள்ளது, மேலும் தரப்படும்.

மேலும் இதை பற்றி தகவல்கள் வேண்டும் எனில் எம்மை தொடர்பு கொள்ளவும்.

suja.oty@gmail.com

வாஸ்து தரும் தொழில் வளர்ச்சி


தொழிற்சாலையானாலும், கடையானாலும் அவற்றை தொடங்குவதற்கு முன்பு ஓரளவுக்கு அறிவியல் பூர்வமான வாஸ்து சாஸ்திரத்தை கடைபிடிக்க வேண்டும்.  அவ்வாறு கடைபிடித்தால் வெற்றி கிட்டும் என்பது அனுபவசாலிகள் கருத்து.  எனவே தொழில் தொடங்குவதற்கான நிலத்தை தேர்வு செய்யும்போது அந்த நிலம் மேற்கு, தெற்குபுறம் நிலமட்டம் உயரமாகவும், கிழக்குபுற நிலமட்டம் சற்று தாழ்வாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் நிலம் சதுரமாகவோ, செவ்வகமாகவோ, எந்தவித குறைபாடுகளோ இல்லாதவாறு இருக்க வேண்டும்.

தொழிற்சாலை கட்டுவதற்கு முன்பு அந்த இடத்தின் வடகிழக்கு மூலையில் பெரிய அளவில் நிலமட்டத்துக்கு கீழாக ஒரு தொட்டியை ஏற்படுத்த வேண்டும்.  கட்டிடத்தின் புறஅளவுகள் ''குழிகணக்கு'' வாயிலாக தேர்வு செய்து எப்படிப்பட்ட யோகத்தை கொடுக்கிறது என்றும், எந்த நட்சத்திரத்தில் அந்த பறப்பளவு வந்துள்ளது என்பதை பொறுத்தே அந்த தொழிற்சாலையின் வளர்ச்சியை நிர்ணயம் செய்யமுடியும்.

மேலும் தொழிற்சாலையின் மெயின் வாயில் தொழிலின் தன்மைக்கு தகுந்தாற்போல் மாறுபடும்.  ஆனால் எல்லா தொழிலுக்கும் ஒரு குறிப்பிட்ட குழிகணக்கு பறப்பளவும் ஒத்துவராது.  தொழிற்சாலைக்கு தேவையான மின்சார வசதியை தென்கிழக்கு மூலையில் நிர்மானித்துக்கொள்ளலாம்.  ஆனால் மேற்கு, தென்மேற்கு திசையில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.  தயாரிக்கப்படும் பொருட்கள் அனைத்தையும் வடமேற்கு மூலையில் சேகரித்து வைக்கும்போது, அந்த பொருட்கள் வெகு சீக்கிரம் விற்பனையாகும்.  இதுபோன்ற வாஸ்துகளை உரிய நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்


சாக்லெட் (chocolate) தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோகோ (cocoa) ஆகும்.  உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள காகா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது.  எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 2,030 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ பயிரிடப்பட்டு வந்தது.  இது தற்போது 6,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது.  அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது மேலும் 2,000 ஹெக்டேர் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில், தற்போது இதன் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.  நீர்ப்பாசன வசதி உள்ள தென்னந் தோப்புகளில் கோகோவை (cocoa) ஊடுபயிராக பயிர் செய்து வருவாய் ஈட்டலாம்.  தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோகோ ஊடுபயிராக பயிர் செய்யப்படுகிறது.

சென்ற ஆண்டில் ஒரு கிலோ கோகோ விலை ரூ.110 - ஆக இருந்தது.  தற்போது இதன் விலை ரூ.120 - ஆக உயர்ந்துள்ளது.  நம் நாட்டில், சாக்லேட் (chocolate) தயாரிப்பில் காட்பரி (cadbury), கேம்ப்கோ (campco), லோட்டஸ், லோட்டி (lotte chocolate) போன்ற நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன.  இந்நிறுவனங்கள் தென் மாநிலங்களிலிருந்து அதிகளவில் கோகோவை கொள்முதல் செய்து வருகின்றன.

கோகோ பயிர் (cocoa plant) வெப்பமான பகுதியில்தான் நன்கு வளரும், என்றாலும் தகுந்த நீர்ப்பாசன வசதி தேவை.  இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோகோ (cocoa) அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.  எனினும் சர்வதேச உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் கோகோ (cocoa) உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது.

கோகோவை பலதரப்பட்ட நிலங்களிலும் பயிர் செய்யலாம்.  எனினும் களிமண் நிலம், சதுப்பு நிலம் மற்றும் மணற்பாங்கான பகுதிகள் இதற்கு ஏற்றவையல்ல.  கோகோ பயிருக்கு ஈரப்பதம் அதிகம் தேவைப்படும்.  எனினும் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கலாகாது.  தென்னை மரங்களைப் போல் கடற்கரையில் இது வளராது.  தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம் என்றாலும், தனிப்பயிராகவும் வளர்க்கப்படக் கூடியது.  வேறு ஒரு பயிருடன் கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம்.

கோகோ பயிருக்கு (cocoa tree) ஆண்டுக்கு சராசரியாக 1,250 - 1,30 ம.மீ.  மழை தேவைப்படும்.  இது 1,500 - 2,000 மி.மீ ஆக இருப்பின் மிகவும் வரவேற்க்கத்தக்கது.

பயிர் செழித்து வளர்வதற்கான வெப்பநிலை சுமார் 25டிகிரி செல்சியஸ் ஆகும்.  வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் கோகோ பயிரிட முடியாது.  அதாவது, ஆண்டு சராசரி வெப்ப அளவு 21 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகள் இதன் சாகுபடிக்கு உகந்தவை அல்ல.

அரசு சார்ந்த பல அமைப்புகளும், சில தனியார் நிறுவனங்களும் கோகோ உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.  இதுதொடர்பாக விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

எனவே, கோகோ (cocoa) பயிரிட்டால் விவசாயிகள் வாழ்வில் செல்வம் கொழிக்கும் என்பதில் ஐயமில்லை.