சிறுவாணி டேம் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது கோவை ரயில் நிலையத்திலிருந்து 36 கி.மீ தொலைவில் உள்ளது (மேலும் இதனை கோவை குற்றாலம் அருவி எனவும் அழைக்கப்படும்). இந்த நீர்வீழ்ச்சி அடர்த்தியான காட்டு பகுதியில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சி செல்ல தேவராயபுரம் அருகில் உள்ள சாலையில் இருந்து சுமார் 4 கி.மீ இடையே மலையேற்றம் மூலம் சென்று அடையலாம்.
ஜூன் மற்றும் அக்டோபர் பருவ காலத்தில் நீர்வீழ்ச்சி சிறப்பாக காணப்படும். நீர்வீழ்ச்சிக்கு கீழே அழகும் மற்றும் ஆபத்தும் நிரந்த பகுதி இது. இந்த நீர்வீழ்ச்சி கோயம்புத்தூர் நகரத்திற்கு குடிநீர் வழங்குகிறது இந்த அணை நீர் குடிப்பதற்கு இனிமையாக இருக்கும் இந்த நீர் மிகவும் பிரபலமானதும் கூட. இந்த இடத்தில் இருள் பகலிலேயே அதிகம் அதனால் மாலை 5 மணி முன்பு இந்த இடத்தை விட்டு வெளியே வந்துவிடவேண்டும் காட்டு யானைகள் மற்றும் சில ஆபத்தான மிருகங்களும் உள்ள இடம். சிறுவாணி அணைக்கு கோயம்புத்தூரில் இருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகிறது. தற்பொழுது சுற்றுள்ள செல்ல சில சமயம் தடை விதிக்கப்பட்டுள்ளது.