Pages

Monday, 28 September 2015

கண்களுக்கு குளிரூட்டும் கல்லார் கார்டன்



கண்களுக்கு குளிரூட்டும் மனதுக்கு மகிழ்வூட்டும் கல்லார் கார்டன் இது ஊட்டி செல்லும் பாதையில் உள்ளது இங்கு பலதரப்பட்ட பழங்கள், பூ, கொடி செடி வகைகள் உள்ளது இங்கு பலா மரம் அதிகம்  இதன் அருகில் ஊட்டி மற்றும் கோத்தகிரி பகுதியில் இருந்து வரும் ஆற்று தண்ணீர் செல்வதால் பார்பதற்கு பெரும் ஒரு இயற்க்கை வரம். இரவு வேளையில் இங்கு யானை, கட்டு எருமை ஆகியவை காணலாம், பகல் பொழுதிலும் சில சமயம் இவற்றை காணலாம்.

பஸ் ரூட்: கோயம்புத்தூர் to மேட்டுப்பாளையம் to கல்லார் பஸ் ஸ்டாப்
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் அணைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்லும் இது தவிர டவுன் பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து இயங்குகிறது.



கோயம்புத்தூர்ரில் இருந்து Black Thunder ருக்கு 45 கிலோமீட்டர்


கோயம்புத்தூர்ரில் இருந்து  Black Thunder ருக்கு 45 கிலோமீட்டர் மட்டுமே கோயம்புத்தூர் வருபவர்கள் இந்த வாட்டர் பார்க்கையையும் ஒரு விசிட் அடித்து செல்லலாம் அத்தனை அழகு கோத்தகிரி மலை அடிவாரத்தில் ஊட்டி மலைக்கு செல்லும் பாதையில் இது அமைந்து உள்ளது சிறுவர்கள் விளையாடி மகிழ பெரியவர்கள் மனம் மகிழ பலதரப்பட்ட வாட்டர் கேம்ஸ் உள்ளது. எழுத்தால் சொல்லமுடிய வில்லை ஒரு முறை நேரில் சென்று பாருங்கள்.

பஸ் ரூட்: கோயம்புத்தூர் to மேட்டுபாளையம் to ஊட்டி செல்லும் வழியில் அமைந்துள்ளது-Black Thunder Water Theme Park.

Black Thunder - Rate Per Head
 600 per person for Adults
 500 per person for Children (3 to 10 years)
 300 per person School (LKG To 5th Std)
 350 per person School (6th Std to 12th Std)
 450 per person College students
Minimum 20 Students from same College / School are eligible for concession.
* Head of the School / College should issue permission letter for the bonafide of the Students.

Contact Address:
Black Thunder, 
Ooty Main Road, Mettupalayam,
Coimbatore, Tamil Nadu 641305
Phone : 91-4254-226632-40(9 Lines)
Mobile : 9894459115/9789188866/9894026640/
9894020504/9894088048/9894032255
E-mail: waterpark@dataone.in



கோத்தகிரி - ஒரு சிறப்புப் பார்வை



நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகப் பெரிய மலைப் பிரதேசேமான கோத்தகிரியை குன்னூர்ஊட்டி ஆகிய இடங்களுடன் ஒப்பிடலாம். இம்மூன்று இடங்களுள் பல விஷயங்களில் கோத்தகிரி சிறியதாக இருந்தாலும் அதன் அழகிய சூழல் மற்ற இடங்களுக்கு சளைத்தது இல்லை. கிருத்துவ மதபோதகரின் மகனாகப் பிறந்த ரால்ப் தாமஸ் ஹாட்ச்கின் கிரிப்பித் என்பவர் இங்கிருந்து தான் வேதங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க தொடங்கினார்.
இந்த மலைப் பிரதேசம் கடல் மட்டத்திலிருந்து 1793 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. மேலும் மலையேறும் (ட்ரெக்கிங்) அனுபவத்திற்கு ஏற்ற இடம் எனப் புகழ் பெற்றது. இங்கே உள்ள மலையேறும் தடங்கள் நீலகிரியில் மனித நாகரீகத்தின் கால்தடம் படாத பல இடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும்.
கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள சுற்றுலாத் தலங்கள்
கோத்தர்களின் மலை

இங்குள்ள புகழ் பெற்ற மலையேறும் தடங்கள்  : கோத்தகிரி - புனித கேத்தரின் அருவி பாதை, கோத்தகிரி - கொடநாடு பாதை, கோத்தகிரி - லாங்க்வுட் ஷோலா பாதை ஆகியன. நீலகிரியின் மலைகள் புல்வெளிகள் இடையே புகுந்து சென்று மலையேறுவோரின் மனதையும் ஆன்மாவையும் வருடிச்செல்லும் பல சிறிய தடங்களும் இங்கு உள்ளன.
ரங்கசாமி தூண் மற்றும் சிகரம் , கொடநாடு வியூ பாயின்ட், கேத்தரின் நீர் வீழ்ச்சி , எல்க் அருவி, ஜான் சுல்லிவன் நினைவிடம், நீலகிரி அருங்காட்சியகம், நேரு பூங்கா, ஸ்நௌடன் சிகரம் ஆகியவை கோத்தகிரியிலும் அதைச் சுற்றியும் உள்ள காண வேண்டிய இடங்கள் ஆகும்.
கோத்தகிரி மிகப் பழமையான மலைப் பிரதேசமாக இருந்தாலும் இதன் வரலாற்றின் பரப்பு ஆங்கிலேய ஆக்கிரமிப்பு காலம் முதலே கிடைத்துள்ளது. கோத்தகிரி என்ற பெயர் கோத்தர்களின் மலை என்று பொருள் படுகிறது.
கோத்தர்கள் பல நூற்றாண்டுகளாக கோத்தகிரியில் வாழ்ந்து வரும் கைவினைஞர் பழங்குடியினர் ஆவர்.அவர்கள் வெளி ஆட்களுடன் பழக விருப்பமில்லாதவர்கள். மேலும் அவர்களது எண்ணிக்கை கடந்த பல வருடங்களாக நிலையாக குறைந்து வருகிறது. கடைசியாக கணக்கெடுத்த போது அவர்கள் ஆயிரம் பேர் இருந்தனர்.
கோத்தகிரியை அடைவது எப்படி:  கோத்தகிரி சாலை வழியாக நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
கோத்தகிரிக்கு செல்ல சரியான சமயம்: கோத்தகிரிக்கு பயணம் செல்ல கோடை காலமே சிறந்த பருவமாகும்.

தமிழ்நாடு சுற்றுலா – ஒரு சிறப்புப் பார்வை

தமிழ்நாடு
தமிழ்நாடு சுற்றுலா, அதன் தன்னிகரில்லா கலாச்சரம், பழம்பெருமை, இயற்கைத்தன்மை மற்றும் அழகினால், தனிச்சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. எவ்வித பயணியாக இருப்பினும், ஆசுவாசமான மனோபாவம் கொண்ட ஒரு சுற்றுலாப் பயணியோ, அல்லது பயணத்தின் அனைத்து அம்சங்களையும் எடை போடக் கூடிய கூரிய திறனாய்வு கொண்ட ஒரு ஆர்வலரோ, யாராக இருப்பினும், அப்பயணியின் கற்பனைகள் மற்றும் உவகைகளுக்கு ஈடு கொடுக்கக்கூடியதாய் உள்ளது. தமிழ்நாடு, தன் தனிச்சிறப்பு வாய்ந்த புராதனப் பெருமையினால், சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
தமிழ்நாட்டின் மலை வாசஸ்தலங்களில், முக்கியமாக, ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற பெருஞ்சிறப்பு பெற்ற தலங்களில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கூடுகின்றனர்.
நீலகிரியின் மலை வாசஸ்தலங்களான ஊட்டி, குன்னூர், கோத்தகிரி ஆகியவை தங்களின் இயற்கை எழில் மற்றும் தேக ஆரோக்கியத்துக்கு உகந்த வானிலை ஆகியவற்றால், சுற்றுலாப் பயணிகளின் அளவில்லா கற்பனா சக்திக்கு உயிரூட்டக்கூடியனவாய், அவர்களுக்கு வரவேற்பு அறைகூவல் விடுக்கின்றன.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு, தமிழ்நாட்டின், புகழ்பெற்ற மற்றொரு மலை வாசஸ்தலமாகும். அவ்வளவாக யாரும் இதுவரை சென்றிராத கொல்லிமலை மற்றும் வால்பாறை ஆகியவையும் கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுலாப் பயணிகளிடையே பரிச்சயமாகி வருகின்றன.
தமிழ்நாட்டு கடற்கரைகள்!
தமிழகத்தின் கரையோர சுற்றுலாத்தலங்கள், முடிவின்றி அகல விரிந்திருக்கும் கடல்நீரின் அழகு சூழ, அனைத்து அம்சங்களும் பொருந்தியனவாய், ஒரு முழுமையான கடற்கரை விடுமுறையை அளிக்கவல்லனவாக உள்ளன.
கடற்கரை விடுமுறை என்றாலே, மஹாபலிபுரம் கடற்கரை நம் கண் முன்னே விரியும். மெரீனா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை ஆகியவை, தமிழ் நாட்டின் தலைநகரான சென்னைக்கு வருவோர்க்கு பயண விருந்தளிப்பனவாய் உள்ளன.
மஹாபலிபுரம் மற்றும் சென்னை கடல் நீரின் விரிவாக்கமாக விளங்கும் கோவளம் கடற்கரை, அதற்குரிய அழகோடு சுற்றுலாப் பயணிகளை வசீகரிக்கிறது.    
நாகப்பட்டின மாவட்டம், தமிழ்நாட்டின் முக்கியமான சில கரையோர சுற்றுலாத்தலங்களான நாகூர், வேளாங்கண்ணி, சிக்கல், கோடியக்கரை, வேதாரண்யம், மன்னார்குடி மற்றும் தரங்கம்பாடி ஆகியவற்றை, உள்ளடக்கியுள்ளது.
நாகூர், வங்காள விரிகுடாவின் கரையோரத்தில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியின் எல்லையோரத்தில் அமைந்துள்ள, இனிய முரண்பாடுகளைக் கொண்ட ஒரு சிறிய நகரமாகும்.   பூம்புஹார், ஒரு கடற்கரையோர தலமாக இருப்பதோடல்லாமல், வரலாற்றுச் சிறப்பு பெற்று, புகழ் பெற்ற தமிழ் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இடம் பெற்றதாகத் திகழ்கிறது.  
கன்னியாக்குமரி, இந்தியாவின் தெற்குக் கடைக்கோடியில், வங்காள விரிகுடா, அரேபியக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை சங்கமமாகும் இடத்தில் அமையப்பெற்றுள்ளது.
இதன் பூகோள அமைப்பு மற்றும் சுண்டி இழுக்கும் சுற்றுலா அம்சங்களினால், இது தமிழ்நாடு சுற்றுலாவின், அதீத மவுசு கொண்ட தலமாக விளங்குகிறது. திருச்செந்தூர் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை கடற்கரையோரம் அமைந்துள்ள சில முக்கிய வழிபாட்டுத் தலங்களாகும்.
தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரிய முனைகள்!
தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்கள், அவற்றின் வலிமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சார மணம் கமழும் தன்மைக்காகவே, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளிடையே பெரும் புகழ் பெற்றுள்ளன.
இவ்வகை தலங்களில் முதன்மையானது, செட்டிநாடு பகுதியில், மிகப் பிரபலமாய் இருக்கும் காரைக்குடி ஆகும். இங்குள்ள சமையற்கலை, நெசவுகள், ஏராளமான கோயில்கள் மற்றும் சொகுசு விடுதிகளாக மாற்றப்பட்டுள்ள மாளிகைகள், ஆகியவை தமிழ் கலாச்சாரத்தின் முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
கொங்கு கலாச்சாரம் தவழும் கோயம்புத்தூர், கோயில் நகரங்களான மதுரை மற்றும் தஞ்சாவூர் ஆகியவையும் தமிழ் கலாச்சாரத்தின் உறைவிடங்களாக விளங்குகின்றன. இவை, இந்த நவீன யுகத்திலும், கலாச்சாரப் பெருமை பொதிந்து காணப்படுகின்றன.
தமிழ்நாட்டுக் கோயில்கள்!
தமிழ்நாட்டின் கோயில்கள், தமிழ்நாடு சுற்றுலாவின், முத்திரை பதித்த மிக முக்கியமான தலங்களாகும். இங்குள்ள கோயில்களின் கோபுரங்கள் உயர்ந்தோங்கிய வண்ணம், தேர்ந்த சிற்ப வேலைப்பாடுகளும், அடுக்கடுக்கான சித்திர வேலைப்பாடுகள் மற்றும் வடிவங்களும் கொண்டவையாக மிளிர்கின்றன.
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகியவற்றின் தெய்வாம்சம் மற்றும் இவற்றை ஆண்ட அப்போதைய மன்னர்களால் நிறுவப்பட்டுள்ள கட்டிடக்கலை அற்புதங்களை பார்க்கவென்றே சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து குவிகின்றனர். 
தாராசுரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருமணஞ்சேரி, திருக்கருக்காவூர் ஆகியன கட்டாயமாக சென்று வரக் கூடிய சில முக்கிய கோயில்களாகும்.
பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுள்ள மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கட்டிடக்கலைக்கு உன்னதமானதோர் சான்றாக, அற்புதமான சிற்ப வடிவங்களை கொண்ட கோயிலாக, உயரிய கட்டிடக்கலை அதிசயமாக விளங்குகிறது.
அலைகளற்ற அமைதியான கடற்கரையில் அமைந்துள்ள இராமேஸ்வரம் கோயில், சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றை கொண்டுள்ள சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ்நாட்டில், பாடற்பொருள் சார்ந்த கோயில்கள், ஆன்மீக சுற்றுலாக்களில் முக்கிய இடம் வகிக்கின்றன.
தஞ்சாவூரை சுற்றியுள்ள நவக்கிரக கோயில்கள் (ஒன்பது கிரகங்கள்), ஒன்பது கிரகங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும். இக்கோயில்களுக்கு, நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஆலங்குடி (வியாழன்), திருநள்ளாறு (சனி), கஞ்சனூர் (வெள்ளி), திருவேற்காடு (புதன்), திருநாகேஸ்வரம் (பாம்பு கிரகம்), கீழ்பெரும்பள்ளம் (பாம்பு கிரகம்), சூரியனார் கோயில் (சூரியக் கடவுள்), திங்களூர் (சந்திரன்) மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) ஆகியனவே அந்த ஒன்பது நவக்கிரக கோயில்களாம்.  
பஞ்சபூதக் கோயில்கள் (ஐம்பூதங்கள்) – சிவபெருமான், ஐம்பூதங்களின் ஆதாரமாகவும், அவற்றின் திவ்ய தரிசனமாகவும் போற்றப்பட்டதால், இக்கோயில்கள், அவருக்காக அர்ப்பணிக்கப்பட்டவை ஆகும்.
திருவானைக்காவல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகியவை தமிழ்நாட்டில் அமைந்துள்ளன; காளஹஸ்தி மட்டும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது.
வீரம் மற்றும் விவேகம் நிரம்பியவராய் வர்ணிக்கப்படும், சுப்ரமண்யர் என்றும் அழைக்கப்படும் தமிழ்க் கடவுளான முருகனின், ஆறு போர் முகாம்களான பழநி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழமுதிர்ச்சோலை, திருத்தணி மற்றும் சுவாமிமலை ஆகியவை ஒவ்வொன்றும், ஒவ்வொரு தனிச்சிறப்புடன், கோயில்களுள் ஐம்பொன்னாய் ஜொலிக்கின்றன.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்கள்!
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, வேலூர், திருப்பூர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய நகரங்கள், மாநிலத்தின் வெவ்வேறு ஊர்களுக்கும் செல்வதற்கான முக்கிய பயண தலங்களாக விளங்குகின்றன.  

Sunday, 27 September 2015

இணையத்தில் முதல் ப்ளாஷ் விற்பனை


இணையத்தில் முதல் ப்ளாஷ் விற்பனையை தொடர்ந்து இரண்டாவது முறையும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ். அந்நிறுவனம் புதிய மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் ஸ்பார்க் என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை விற்பனைக்கு அறிவித்திருந்தது. முதல் ப்ளாஷ் விற்பனையில் இந்நிறுவனம் சுமார் 20,000 ஸ்பார்க் போன்களை இரண்டே நிமிடங்களில் விற்பனை செய்தது. கேன்வாஸ் ஸ்பார்க் இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுகின்றது. மேலும் ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6582 பிராசஸர் மற்றும் ஜிபி ரேமும் வழங்கப்பட்டுள்ளது.

கிராமபுறங்களில் மொபைல் இணைப்பு மத்திய அரசு புதிய திட்டம்

இண்டர்நெட்


2018 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் 55,669 கிராமங்களில் மொபைல் இணைப்புகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்சமயம் மொபைல் இணைப்புகள் இல்லாத சுமார் 55,669 கிராமங்களுக்கு 2014 முதல் 2018 ஆம் ஆண்டு காலத்தில் மொபைல் இணை்புகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source By: Online

ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் செல்போன்


பல மாத வதந்திகளுக்கு ஒரு வழியாக முற்று புள்ளி வைத்தது உலகின் பிரபல மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள். கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் ஆப்பிள் நிறுவனம் இரு கருவிகளை வெளியிட்டு எதிர்பார்ப்பு செய்திகளை உண்மையாக்கியுள்ளது.

ஐபோன் 6எஸ் 1334*750 ரெசல்யூஷனும் ஐபோன் 6எஸ் ப்ளஸ் 1920*1080 பிக்சல் ரெசல்யூஷனும் கொண்டிருப்பதோடு இரு கருவிகளும் கைரேகை ஸ்கேனர் கொண்டிருக்கின்றது.

புதிய ஐபோன்களில் 3டி ஃபோர்ஸ் டச் அம்சமும் ஏ9 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

எடை இழப்பிற்கு உருளைக்கிழங்குகள் சாப்பிடுங்கள்

weight loss
நீங்கள் எடை இழப்பு உணவு திட்டத்திலிருந்தால்,அரிசிக்கு பிறகு உருளைக்கிழங்குகள் தவிர்க்க வேண்டிய உணவு பட்டியலில் மேலே இருக்கின்றன. ஆனால் அப்படிச் செய்வதன் மூலம் நீங்கள் மிகவும் எளிமையான மற்றும் சுலபமான எடை இழப்பு வழியை இழக்கலாம். பிரஞ்சு பொரியல் மற்றும் குடைமிளகாய் உங்கள் வயிற்றுக்கு  பயணம் தொடங்க ஒரு பொருத்தமான ஆரோக்கியமான விருப்பத தேர்வு இல்லை என்றாலும், உருளைக் கிழங்குகள் உங்கள் கூடுதல் எடையை இழக்க உதவ முடியும். எப்படி என்பது இங்கே.
குறைவான கலோரிகள்:
மக்களின் பொது நம்பிக்கைக்கு மாறாக, உருளைகள் குறைந்த கலோரிகள் கொண்டவை(நீங்கள் வறுத்த பொருட்களை உங்கள் தட்டில் நிரப்பி வைக்கும்  வரை)வேகவைத்த உருளைக்கிழங்கு 10 கிராம் சாப்பிட்டால் நீங்கள் வெறும் 10 கலோரிகள் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குதத் தெரியுமா? ஆகவே, உங்கள் காலை சிற்றுண்டியில் அல்லது மதிய உணவில் ஒரு கிண்ணம் வேக வைத்த உருளைகள்(100 கிராம்) உங்க்ள் வயிற்றை நிரப்புவது மட்டுமன்றி வெறும் 100 கலோர்களைத் தான் சேர்க்கிறது. மோசமான பந்தயம் இல்லை!
உயர்ந்த அளவு சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்
பல பேருக்கு உருளைக்கிழங்கு வழக்கமான இடைவெளியில் சர்க்கரையைமெதுவாக வெளியீட்டைஏற்படுத்த காரணமான  சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளின் ஒரு சிறந்த ஆதாரமாகஇருக்கிறது என்று தெரியாது. ர்ன்ஸ்ப்ர் நீங்கள் உருளைக்கிழங்கை சாப்பிடும் போது நீங்கள் அனெகமாக வயிறு முழுமையாக இருப்பதாக உணர்வீர்கள் (குளுக்கோஸின்ஒரு நிலையானவெளியீடுகாரணமாக)இதையொட்டி உங்கள் பசியைக்குறைக்கிறது மற்றும் எடை போடுவதைதடுக்கிறது (அதிகம் சாப்பிடுவதன் காரணமாக).ஒரு உணவு சிறப்பு நிபுணரின்ஒரு மாதிரிஎடை இழப்பு உணவு திட்டம் இங்கே.
ஊட்டச்சத்தை அடைக்கிறது
100 கிராம் உருளை உங்களுக்கு 1.6 கிராம் புரதம், 0.1 கிராம் கொழுப்பு மற்றும் 0.4 கிராம் நார் சத்து அளிக்கிறது. அவை நிறைய இரும்புசத்து, வைட்டமின் சி பெற்றிருப்பது மட்டுமின்றி, அவை ஆதிக பொட்டாசியம் மற்றும் குறைந்த சோடியத்துடன், எடை இழக்க திட்டமிடும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானதாகும். அது பிரெட் மற்றும் அரிசியுடன் ஒப்பிடும் போது குறைந்த கிளைசெமிக் குறியீட்டுடன், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாகவும் உள்ளது.
சுவையானது மற்றும் சமைக்க சுலபமானது]
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும் போது உருளையை சமைப்பது மிகவும் எளிதானது மற்றும் வேகமாக முடியும் என்று சொல்லத் தேவையில்லை. ஆனாலதை நீங்கள் அதை ஆழமாக வறுக்கவும் அல்லது வெண்ணெய் அல்லது நெய்யால்  சமைக்க வேண்டும் என்று பொருளில்லை. நீங்கள் ஆரோக்கியமான குழம்புகள், உருளை கட்லெட்(மேலோட்டமாக வறுத்தது) அல்லது உருளைக்கிழங்கு சலாடை தேர்வு செய்வதௌ உறுதி படுத்திக் கொள்ளவும். உருளைக்கிழங்கு சிப்ஸ், ஆலூ பராட்டா மற்றும் உருளைக்கிழங்கு ரொட்டி ஆகியவை உங்கள் எடை இழப்பிற்கு உதவுவதற்கு பதில் அதிகப் படுத்தும் என்பதில் ஜாக்கிரதையாயிருங்கள்.உருளைக்கிழங்கு மற்றும் அதனால் செய்யப்படும் உணவுகளின் கலோரி எண்ணிக்கை பற்றி தெரிந்து கொள்ள் மேலும் படியுங்கள்.
எனவே உங்கள் எடையிழப்பு ஆட்சியிலிருந்து இந்த தாழ்மையான காய்கறியை விலக்காதீர்கள். பதிலாக அதன் ஆரோக்கிய பலன் களை அறுவடை செய்ய ஆரோக்கியமான வழியில் சாப்பிடுங்கள். ஆமாம், எடை இழப்பு இதை விட சுலபமாக இருக்க முடியாது.
Source: Eat potatoes to lose weight. Yes, LOSE weight!
Translated by R. Prameela
Image Source: Shutterstock